அ,தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் -சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பு

by Admin / 28-03-2023 11:07:11am
அ,தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் -சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்திருந்தாா். நீதிபதி குமரேஷ் பாபு விசாரணை நடத்தி வந்தார் இந்நிலையில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் இது குறித்த தீர்ப்பை நீதிபதி குமரேஷ்பாபு வழங்கினார் அதன்படி ஆதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை இல்லை என்றும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்த்தாா். இதன் மூலம் அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி தேர்வாவதோடு அதிமுகவினுடைய அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியில் இருந்தும்ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு ஒன்பது மாதங்களாக இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருந்தது .அதற்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது இதன் மூலம் அதிமுக எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் வைத்த கோரிக்கையான ஒற்றை தலைமை என்பது இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதனால் அதிமுக இனி எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் கீழ் அவரை பொதுச் செயலாளராக கொண்டு இயங்கும். அவர் எடுக்கின்ற முடிவுகள் அவரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதிமுகவினுடைய இறுதி முடிவாகவே அமையும் .இனி ஓ பன்னீர்செல்வம் அவர் தரப்பு எந்த விதமான மேல்முறையீடு செய்தாலும் அதற்கு சாதகமான தீர்ப்பு அமையுமா என்பது சந்தேகத்திற்குரியது

 

 

 

 

Tags :

Share via