பெண்ணை கடித்துக் கொன்ற முதலை
ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாடா மாவட்டத்தில் உள்ள பைரூபா ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்னை முதலை ஒன்று தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் உடலை முதலை கடித்து உண்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இறந்தவர் பெயர் ஜோஷ்னா ஜெனா என்றும் கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதே கேந்திரபாடா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், முதலை தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உள்ளது.
Tags :



















