திடிரென வலிப்பு வந்து உயிரிழந்த ஒட்டுநர்

கோவை சாய்பாபா காலனி அடுத்த கேகே புதுர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஜனார்த்தனன், இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் நேற்று தனது காரில், பீளமேடு பகுதியில், சென்று கொண்டு இருந்த பொழுது திடிரென இவருக்கு வலிப்பு ஏற்பட்டது, இதில் சுயநினைவை இழந்த இவரது கார், மற்றோரு காரின் மீது பலத்த வேகத்தில் மோதியது, சற்று நேரத்தில வலிப்பு வந்த ஜனார்த்தனன் தனது காரிலேயே உயிரிழந்தார், இதனைத் தொடர்ந்து இதுகுறித்து ஜனார்த்தனனின் கார் மோதி விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரான பீளமேட்டைச் சேர்ந்த 58 வயதான சுரேஷ், காந்திபுரம் பகுதியில் உள்ள, போக்குவரத்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,
Tags :