விடுதியின் மேலிருந்து குதித்து 5ம் வகுப்பு மாணவி தற்கொலை

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் அருகே விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஜோதிபாபுலே விடுதியில் தங்கியிருந்த சந்தியா என்ற 5ம் வகுப்பு மாணைவியை நேற்று (ஜூலை 13) அவரது பெற்றோர் விடுதியில் சேர்த்துள்ளனர். பெற்றோர் வற்புறுத்தியதால் விடுதியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில், அம்மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :