தமிழ்நாட்டில் 40 காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

by Editor / 14-07-2025 12:11:46pm
தமிழ்நாட்டில் 40 காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வரும்போது காவல் துறையில் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். அந்த வகையில் தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக, துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் உள்பட 40 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via