பெங்களூரு தீ விபத்து: பெண் உயிரிழப்பு;

by Editor / 21-09-2021 07:53:19pm
பெங்களூரு தீ விபத்து: பெண் உயிரிழப்பு;

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தேவரசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சமையல் எரிவாயு கசிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.  
சமையல் எரிவாயு கொண்டு செல்லும், பைப் லைனில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

Tags :

Share via