உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்

by Editor / 21-09-2021 07:49:34pm
உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்

 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. 23-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 25-ந்தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது. 

விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via