ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு? உண்மை என்ன?

இந்தியாவில் அண்மை நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 220 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் அது 2022 ஜனவரியில் போடப்பட்ட உத்தரவு என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர். மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
Tags :