பொங்கல் பண்டிகை கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.47 கோடிக்கு மது விற்பனை. 

by Editor / 18-01-2025 10:30:32am
பொங்கல் பண்டிகை கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.47 கோடிக்கு மது விற்பனை. 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.13ம் தேதி முதல் 16ம் தேதி வரை( ஜன.15ம் திருவள்ளுவர் தினம் தவிர்த்து) 3 நாட்களில் ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13, 14,15 ஆகிய 3 நாட்களில் 678.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இதுவரை கூடுதலாக ரூ.162 கோடிக்கு மது விற்பனை.
 

 

Tags : பொங்கல் பண்டிகை கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.47 கோடிக்கு மது விற்பனை 

Share via