அரசியல் எதிர்காலம் கருதி எந்த ஒரு முடிவையும் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக்கூடாது .

by Admin / 07-05-2026 02:39:42pm
 அரசியல் எதிர்காலம் கருதி எந்த ஒரு முடிவையும் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக்கூடாது .

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த பொழுது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக வெற்றி கழகத்திலிருந்து ஆதரவு கேட்டு கடிதம் வந்திருப்பதால் அதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு உயர்நிலை குழு கூட்டம் கூடி அது குறித்து விவாதித்த பிறகு தெரிவிக்கப்படும் என்றும்  திமுக கூட்டணியில் தான் தாங்கள் இப்பொழுதும் இருக்கிறோம் என்றும் அரசியல் எதிர்காலம் கருதி எந்த ஒரு முடிவையும் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்ததோடு ஆளுநர் வழியாக பாஜக ஆட்சி அமைக்க விடாமல் தடை போட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்கள் சண்முகம் வீரபாண்டியன் ஆகியோரும் இந்த சந்திப்பின் பொழுது உடன் இருந்தனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் வீரபாண்டியன், திமுக எந்த வித அழுத்தத்தையும் தரவில்லை என்றும் நாளை கட்சியின் கூட்டத்தில் பேசி முடிவெடுத்த பிறகு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு குறித்து நிலைபாட்டை தெரிவிப்போம் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo