பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளதுபள்ளி மூலம் பெற்றுக்கொள்ளலாம்..

by Admin / 22-01-2026 05:56:52pm
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளதுபள்ளி மூலம் பெற்றுக்கொள்ளலாம்..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவோ அல்லது அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www dge.in.gov,in வாயிலாகவோ நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. தனித் தேர்வர்கள் மேற்குறிய இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் நுழைவுச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம் மற்றும் தேர்வு மையத்தின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ,ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரையோ அல்லது மாவட்ட கல்வியை அலுவலகத்தையோ அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo