மனைவியை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கொடூர கணவன்..

by Editor / 11-09-2022 12:22:52pm
மனைவியை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கொடூர கணவன்..

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தா.பேட்டை அருகே துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் போர் வண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 நாட்களாக சண்டை நடந்துள்ளது. மேலும் ரமேஷ் தனி குடித்தனம் செல்ல வேண்டுமென மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மனைவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மனைவி கோமதியை அடித்து உதைத்துள்ளார். அடி தாங்க முடியாமல் கோமதி ரோட்டுக்கு ஓடிவந்துள்ளார். அப்போதும் விடாத ரமேஷ் கோமதியை பின் தொடர்ந்து ஓடி வந்து, அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். மனைவியை ஓட ஓட விரட்டி கணவனே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories