தெலுங்கனா கைத்தறி சங்கம் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

by Staff / 12-04-2022 01:38:16pm
தெலுங்கனா  கைத்தறி சங்கம் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாரங்கல் மாவட்டம் தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இந்த குடோனில் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து உள்ளது. இது குறித்து பொதுமக்கள் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு குடோன்  முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் இறந்த அரசு பள்ளி சீருடைகள் உட்பட மொத்தம் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo