அதானி கடன்கள் பெருமளவு அதிகரிப்பு

by Staff / 19-04-2023 12:30:50pm
அதானி கடன்கள் பெருமளவு அதிகரிப்பு

கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் கடன் இந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, அதானி குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் கடன் கடந்த ஆண்டை விட 20.7% அதிகரித்து ரூ.2.3 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில், சர்வதேச வங்கிகளின் பங்கு 29 சதவீதம். மேலும், உள்நாட்டு கடன்களும் அதிகமாக இருப்பதால், எஸ்பிஐ-க்கு ரூ.27 ஆயிரம் கோடியை செலுத்த வேண்டியுள்ளது. பங்குச்சந்தை மோசடி விவகாரத்தில், அமெரிக்காவின் ஹிண்டன்ப்ர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

 

Tags :

Share via