பூங்காவில் சிறுமியை கடித்துக் குதறிய 2 வளர்ப்பு நாய்கள்

by Staff / 06-05-2024 12:30:00pm
பூங்காவில் சிறுமியை கடித்துக் குதறிய 2 வளர்ப்பு நாய்கள்

 சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் 5 வயது மகளை இரண்டு ரேட்வீலர் நாய்கள் கடித்துக் குதறின. பூங்காவில் சிறுமி சுதக்சா விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு புகழேந்தி என்பவரது 2 வளர்ப்பு நாய்கள் திடீரென பாய்ந்து கடித்துக் குதறின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாறிய தாய் சோனியாவையும் நாய்கள் கடித்தன. படுகாயமடைந்த சிறுமி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்தனர்.தடை செய்யப்பட்ட நாய் இனங்களை பாதுகாப்பற்ற முறையில் கயிறு கட்டாமல் பூங்காவுக்கு கொண்டு வந்த புகழேந்தி, அவரது மகன், மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories