ஆந்திராவில் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி ஆந்திராவில் இரு வேறு இடங்களில் ஆற்றில் குளித்த 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் குளித்த 11 இளைஞர்களில் 6 பேர் உயிர் தப்பிய நிலையில், 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஸ்ரீசைலம் மலைக்கு கீழ் உள்ள கிருஷ்ணா நதியில் குளித்த தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags :