10-ம் வகுப்பு தேர்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் 97.22 சதவீதத்துடன் முதலிடம்

by Editor / 20-06-2022 04:09:57pm
10-ம் வகுப்பு தேர்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் 97.22 சதவீதத்துடன் முதலிடம்

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதம் 90.07 ஆகும். இதில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது. 97.22 சதவீத மாணவ-மாணவிகள் அந்த மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 95.51 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 98.89 சதவீதமாகவும் அந்த மாவட்டத்தில் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் மாவட்டம் 97.15 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்தது. விருதுநகர் மாவட்டம் 95.96 சதவீதத்துடன் 3-வது இடத்தையும், மதுரை மாவட்டம் 95.09 சதவீதத்து டன் 4-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 94.26 சதவீதத்துடன் 5-வது இடத்தையும் பிடித்தன. அதற்கு அடுத்தப்படியாக சிவகங்கை (93.62 சதவீதம்), புதுச்சேரி (93.45), திருவண்ணாமலை (93.07), தூத்துக்குடி (92.88), கோவை (92.38) ஆகிய மாவட்டங்கள் 6 முதல் 10-வது இடங்களை பிடித்தன. வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் 79.87 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via