ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து போலீசை மீட்க சிறப்பு பயிற்சி

by Editor / 20-06-2022 04:05:45pm
ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து போலீசை மீட்க சிறப்பு பயிற்சி

ஆன்லைன் சூதாட்டம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினரையும் சீரழித்து வருகிறது. இந்த விளையாட்டில் ஈடுபட்டு பொருளாதாரத்தை இழந்து கடனாளி ஆகும் பலர் தங்கள் உயிரை மாய்த்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருமானத்தை இழந்த அம்பத்தூரை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சரவணகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் போலீஸ்காரர்கள் பலர் ஆன்லைன் ரம்மி மோகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விளையாட்டில் இருந்து போலீஸ்காரர்களை மீட்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சிறப்பு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன் முதல் பயிற்சி வகுப்பு கடந்த 18-ந்தேதி நடந்தது. இதில் 150 போலீஸ்காரர்கள் பங்கேற்றனர். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் உங்கள் பணத்தை இந்த செயலியின் மூலம் இழக்காதீர்கள் என்று வலியுறுத்தி வருகிறார்கள். பயிற்சி முகாமில் பொருளாதார நிபுணர்கள் மற்றும் பேராசிரியர் நரேந்திரா ஆகியோர் பணத்தை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தங்கள் கவனத்தை நல்ல வழிகளில் திசை திருப்புவது பற்றியும் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பல 'பேட்ச்' மூலம் இந்த பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளனர்.


 

 

Tags :

Share via