தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 46.48 இலட்சம் பிடிப்பட்டது வருமானவரித்துறையினர் விசாரணை.

by Editor / 21-03-2024 09:58:13am
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 46.48 இலட்சம் பிடிப்பட்டது வருமானவரித்துறையினர் விசாரணை.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டன இதில் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உடைய உத்தரவுப்படி 15 பறக்கும் படை குழுவினரும் 15 நிலையான குழுவினும் என முப்பது குழுவினர் களம் இறக்கப்பட்டுள்ளனர் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு எட்டு மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன இதன் தொடர்ச்சியாக இருபதாம் தேதி இரவு முதல் 21 ஆம் தேதி அதிகாலை வரை தென்காசி மாவட்டத்தின் மத்தாளம் பாரி பகுதியில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாயும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை இலத்தூர் சாலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் பிரானூர் பார்டர்  பகுதியில் செயல்பட்டுவரும் மரம் ஆலைக்கு காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 10 லட்சத்தை பறக்கும் படை சோதனை குழுவினர் பறிமுதல் செய்து வாவாநகரத்திலிருந்து பணம் கொண்டு வந்த சாகுல் ஹமீது என்பவரிடம் விசாரணை நடத்தி அந்த பணத்தை பறிமுதல் செய்து கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வருமானவரித்துறையினர் வசம் அந்த பணத்தை இரவு 12 மணியளவில்  ஒப்படைத்துள்ளனர், மேலும் இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குத்துகல் வலசை பகுதியில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையினர் பேருந்தில் நடத்திய அதிரடி சோதனையில் தென்காசி பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற நபர் பேருந்தில் எந்த விதமான ஆவணங்களும் இன்றி முப்பது லட்சம் கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வட்டாட்சியர் பட்டமுத்து இடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அவர்களிடம்  இன்று அதிகாலை 2 மணியளவில் ஒப்படைத்தார். இந்த பணம் ஹவாலா பணமா  என்பது குறித்தும் வருமான வரி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனையில் 46 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags : தென்காசி மாவட்டத்த்தில் ஒரே நாளில் 46.48 இலட்சம் பிடிப்பட்டது.வ்ருமானவரித்துறையினர் விசாரணை.

Share via