பிரதமர் வருகை 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு.

by Editor / 05-04-2025 04:40:32pm
பிரதமர் வருகை 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா 6ஆம் தேதி நடப்பத்தைமுன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரை வந்து டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்.
மதுரை மாரகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி,  மண்டேலா நகர், பெருங்குடி,  வலையன்குளம் மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில் 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மூன்று அடுக்குகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : பிரதமர் வருகை 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு.

Share via