மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

by Editor / 09-02-2025 12:01:28am
மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

பெரியாரை இழிவுப்படுத்தலாம் என்று நினைத்தவர்களின் எண்ணங்களில் மண் விழும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருவண்ணாமலையில் பேட்டியளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதனை கொண்டாடும் வகையில் இன்று மாலையில் திருவண்ணாமலையில் உள்ள தந்தை பெரியார், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி  ஆகியோரின் சிலைகளுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். ஈரோடு மண்ணில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கி கொண்டிருக்கின்ற தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து உள்ளது. பெரியாரை இழிவுப்படுத்தலாம் என்று நினைத்தவர்களின் எண்ணங்களில் மண் விழும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தி.மு.க பெற்று உள்ளது. 

தி.மு.கவை எதிர்த்து நின்ற யாரும் டெப்பாசிட் பெறவில்லை. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து நடைபெறுகின்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி பெற்று உள்ளது. 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், அதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், 3 இடைதேர்தல்களிலும் தி.மு.க மகத்தான வெற்றியை பெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தி.மு.க. வென்றதற்கு பின்னால் கள்ளக்குறிச்சி சம்பவம் மற்றும் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இந்த 2-ஐ வைத்து கொண்டு விக்கிரவாண்டி இடைதேர்தல் நடைபெறும் போது இதனை வைத்து பெரிது படுத்தி பிரச்சாரம் செய்தார்கள். 

இந்த தேர்தல் உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரச்சாரம் செய்தார். 62 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காட்டினோம். அடுத்து இந்த இடைத்தேர்தல் இந்த தேர்தல் தி.மு.க. தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்ல வில்லை. தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் நடத்திய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைந்து இருக்கிறோம். இந்த வெற்றி தந்தை பெரியாருக்கு கிடைத்த வெற்றி. தந்தை பெரியாரை பற்றி இழிவு பேசுகிறவர்கள் யாராக இருந்தாலும் அழிந்து போவார்கள் என்பதற்கு இந்த தேர்தல் முடிவு. இதேபோல் 1971 சட்டமன்ற தேர்தலிலும் மிக பெரிய வெற்றி கிடைத்தது. 184 இடங்களில் வெற்றி பெற்றோம்.  2026ல் இந்த வெற்றி தொடரும். பா.ஜ.க. இந்த இடைத்தேர்தலில் சீமான் கட்சிக்கு முழுக்க, முழுக்க எல்லா விதமான உதவியும் செய்தது எல்லாருக்கும் தெரியும். பெரியாரையும், தி.மு.க.வை எதிர்க்க, எதிர்க்க நாங்கள் வலுவோடு வருவோம் என்று ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

Tags : மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

Share via