3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

by Staff / 31-10-2025 11:38:07pm
 3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலமும் சிபிஐ  அதிகாரிகள் விசாரணை.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த 16 ஆம் தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், தற்போது 500 மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைத்தும், 3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 

Tags : 3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

Share via

More stories

Logo