தமிழக முதலமைச்சர் இனியும் வாய்மூடி மெளனியாக இருக்கக் கூடாது -அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

by Admin / 31-07-2026 07:16:55pm
 தமிழக முதலமைச்சர் இனியும் வாய்மூடி மெளனியாக இருக்கக் கூடாது -அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக்கழக அரசு தனது 2026 தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து இருந்த நிலையில் தற்பொழுது கடன் தொகையின் அடிப்படையில் சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் 75,000 வரை முழு தள்ளுபடி என்றும் அதற்கு மேல் உள்ள கடன்களுக்கு 35,000 வரை மட்டுமே தள்ளுபடி அறிவித்துள்ளதை கண்டித்துள்ளதோடு ஆகஸ்ட் 6ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதோடு தமிழக வெற்றிக்கிழங்கு அரசு இதனை நிறைவேற்றாத பட்சத்தில் விவசாயிகளை திரட்டி அதிமுக மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தும் என்றும் மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதோடு அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்களையும் காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு அறிய வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்க மறுக்கும் சூழலில் தமிழக முதலமைச்சர் இனியும் வாய்மூடி மெளனியாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் என்பது தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஒர் உணர்வுபூர்வமான பிரச்சனை என்றும் தெளிவுப்படுத்தினார்

 

Tags :

Share via

More stories

Logo