தகுதியற்ற ரேஷன் பயனாளிகளை நீக்க மத்திய அரசு முடிவு.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 50 சதவீத மக்களுக்கும், கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களுக்கும் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. பொருட்களை பெற தகுதியற்ற ரேஷன் பயனாளிகளை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பலர் பட்டியலில் உள்ளனர்.செப். 30-க்குள் தகுதியற்றவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags : தகுதியற்ற ரேஷன் பயனாளிகளை நீக்க மத்திய அரசு முடிவு.