3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்-மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் ஜன.10ம் தேதி தொடங்கி ஜன.17ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், "அரசு விடுமுறை நாட்கள் தவிர ஜன.10, 13, 17 நாட்களில் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்" என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கூறியுள்ளார்.
Tags : 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்-மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா.