ஆட்சியின் நிறம் எதுவாக இருந்தாலும் ஊழல் இல்லாத வேகத்தை விரும்புவதாக நடிகர் ஹரீஷ் பேரடிபதிவு.

by Editor / 17-04-2023 09:00:42am
ஆட்சியின் நிறம் எதுவாக இருந்தாலும் ஊழல் இல்லாத வேகத்தை விரும்புவதாக நடிகர் ஹரீஷ் பேரடிபதிவு.

பிரபல கேரளா நடிகர் ஹரீஷ் பேரடி தேர்தலில்  வாக்களிக்க தொடங்கியதில் இருந்து இடதுசாரிகளை ஆதரித்து வந்ததாகவும், இனி பாஜகவின் தாமரைக்கு வாக்களிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவில் கேரளாவுக்கு வந்தே பாரத் ரயில் கிடைத்ததாக வெளியான செய்தியுடன் பேஸ்புக் பதிவில் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆட்சியின் நிறம் எதுவாக இருந்தாலும், நானும் என் நாடும் ஊழல் இல்லாத வேகத்தை விரும்புகிறோம்.. இனி என் வாக்கை வீணாக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். ஹரீஷ் பேரடி, தமிழில், கிடாரி, விக்ரம் வேதா, மெர்சல், கைதி, சுல்தான், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo