சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு.

by Editor / 13-02-2024 08:45:26am
சபரிமலையில்  மாசி மாத பூஜைகளுக்காக இன்று  நடை திறப்பு.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு இன்று மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். நாளை (புதன்கிழமை) காலை முதல் வரும் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

 

Tags : சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு.

Share via

More stories