இந்துகோவிலை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று துபாய் பயணம்.

by Editor / 13-02-2024 08:40:45am
இந்துகோவிலை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று துபாய் பயணம்.

இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாய் செல்கிறார். பிராந்திய உறவுகள் மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பயணத்தின் போது, ​​அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ஏழாவது ஐக்கிய அரபு அமீரகப் பயணம் இதுவாகும். கடந்த எட்டு மாதங்களில் இது மூன்றாவது பயணமாகும். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 

Tags : இந்துகோவிலை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று துபாய் பயணம்.

Share via