மதுரை மீனாட்சி கோவிலில் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழ் நாட்டிலிருந்து மட்டுமில்லாது.இந்தியாவிருந்தும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாமியை தரிசித்து செல்வதோடு, ேகாவில் சிற்பங்கள்,கட்டிடக்கலையின் உன்னதங்களை அறிய வருகிறார்கள். அரசு கொரோனாவை கட்டுபடுத்த தீவிர முயற்சியில் இறங்கியதன் விளைவு .இன்று கொரோனா படிபடியாக குறைந்துள்ளது.இந்நிலையில்,ஒமிக்ரான் வைரஸ் வேறு பயமுறுத்திக்கொண்டிருக்கிறதது.அதனால்,அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ,பொது இடங்களுக்குச்செல்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிஇருக்கவேண்டுமென்று அரசாணை பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்தே மீனாட்சி கோவில் நிர்வாகம் இரண்டு தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி கோவிலில் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி
டிசம்பர் 13ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Tags :