சாப்பாடு கொடுக்கவில்லை மனைவியை கொன்ற கணவன்.

by Editor / 21-02-2025 09:52:34am
சாப்பாடு கொடுக்கவில்லை மனைவியை கொன்ற கணவன்.

சென்னை அடுத்த திருமுல்லைவாயல் கமலம் நகரை சேர்ந்தவர்கள் விநாயகம் (75) - தனலட்சுமி (65) தம்பதி. சர்க்கரை நோயாளியான விநாயகம் ஒரு காலை இழந்தவராவார். இதனால் தனக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கவேண்டும் என தனது மனைவியிடம் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று தனலட்சுமிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உணவு வழங்க தாமதமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விநாயகம், தனலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 

Tags : சாப்பாடு கொடுக்கவில்லை மனைவியை கொன்ற கணவன்.

Share via