நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

by Admin / 18-12-2023 02:15:10pm
 நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலை தொடர்கிறது

. இந்நிலையில் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும் 33 இடங்களில் மிக கனமழையும் 12 இடங்களில் கனமழையும் பதிவாக உள்ளதாகவும் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரை தென் தமிழகத்தில் வட தமிழகத்தின் சில இடங்களிலும் மழையை பெய்யக்கூடும் என்றும் கனமழைக்கான எச்சரிக்கை பொறுத்தவரை நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஏற்கனவே தரப்பட்ட சிவப்பு எச்சரிக்கை [ரெட்அலர்ட்.]

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கும் அதிக கன மழை காண எச்சரிக்கை தொடர்வதாகவும் மேலும் விருதுநகர் தேனி மாவட்டங்களில் ஒரே ஒரு இடங்களில் மிக கனமழையும் நீலகிரி கோவை திருப்பூர் மாவட்டங்களில் கன மழை மற்றும் ராமநாதபுரத்தில் ஒரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் நாளை நெல்லை, குமரி ,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
 

Tags :

Share via