குற்றக் கும்பல்களை ஒழிக்க புதிய ராணுவக் கூட்டணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

by Admin / 09-03-2026 10:31:50am
  குற்றக் கும்பல்களை ஒழிக்க புதிய ராணுவக் கூட்டணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை புளோரிடாவின் டோராலில் உள்ள அவரது  கோல்ஃப்  ரிசார்ட்டில் ஒரு பாதுகாப்பு மாநாட்டை நடத்தினார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட  குற்றக் கும்பல்களை ஒழிக்க புதிய ராணுவக் கூட்டணியை டிரம்ப் அறிவித்தார். அர்ஜென்டினா,  எல் சால்வடார், ஈக்வடார்,  சிலி,  பராகுவே, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட சுமார் 12  லத்தீன்  அமெரிக்க மற்றும்  கரீபியன் நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.குற்றக் கும்பல்களை ஒழிக்க அந்தந்த நாட்டு ராணுவங்களைப் பயன்படுத்துமாறு டிரம்ப் வலியுறுத்தினார் .தேவைப்பட்டால் , கூட்டாளி நாடுகளின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்கா ஏவுகணைகளை பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் . சீனா மற்றும் ஈரானின் செல்வாக்கைக் குறைக்கவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும்  தலைவர்கள் ஒரு கூட்டுப்பிரகடனத்தை மேற்கொண்டனா்.

 

Tags :

Share via