ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

by Editor / 05-01-2022 10:26:07pm
ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மின்சார எஞ்சினிலிருந்து டீசல் என்ஜின் மாற்றுவதற்காகராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை , திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கீழே குறிப்பிட்ட சேவைகளில் இருந்து அமுலுக்கு வருகிறது. ஜனவரி 11 அன்று ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 16734 ராமேஸ்வரம் - ஓகா  எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களிலிருந்து முறையே மதியம் 02.50 மற்றும் 03.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.35 மற்றும் 03.25 மணிக்கு புறப்படும். அதேபோல ஜனவரி 14 அன்று ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் வண்டி எண் 16733 ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 02.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 02.40 மணிக்கு புறப்படும்.

 

Tags :

Share via