திருநெல்வேலி மாநகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு.
திருநெல்வேலி மாநகராட்சி உடன் ரெட்டியார்பட்டி, இட்டேரி முன்னேற்பள்ளம் நொச்சிகுளம், ராமையன்பட்டி தாழையூத்து கீழநத்தம் உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளை இணைக்க கூடாது, என கூறி இன்று காந்தி ஜெயந்தியை ஒட்டி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் இட்டேரி கிராம பஞ்சாயத்தில் பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல ராமையன்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கவுன்சிலர் மாரியப்பன் என்பவர் தரையில் உருண்டு புரண்டு போராட்டம். பொதுமக்கள் தங்கள் கிராமத்தை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Tags : திருநெல்வேலி மாநகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு.