மேக்சிகோ அரசு பத்தாயிரம் வீரர்களின் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

by Admin / 24-02-2026 09:15:52am
 மேக்சிகோ அரசு பத்தாயிரம் வீரர்களின் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

மெக்சிகோவில் இரண்டு நாட்களாக வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாலிஸ்கோ நீயும் ஜெனரேஷன் கார் டெல் அமைப்பின் தலைவர் டெமோசியோ எல்மென்சோ ஒசே குபேரா சேர்வான்டஸ் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து மெக்சிகோ முழுவதும் கடும் வன்முறை வெடித்துள்ளது. அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே நாடு தழுவிய பழிவாங்கும் நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது. மெக்ஸிகோ ராணுவம் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் உதவியுடன் ஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா நகரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் எல்மெண்ட் சோ காயம் அடைந்தார். காயமடைந்த அவர் மெக்சிகோ நகரத்திற்கு விமான மூலம் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எல் மென் சோவை கைது செய்ய முயன்ற போது மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 25க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவரது மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக மேக்சிகோவின் 31 மாநிலங்களில் குறைந்தது 20 மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளன. குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பீதி அடைந்துள்ளனர் பல இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பு வேர்ட்டோ வல்லாருட்டா போன்ற கடற்கரை நகரங்களிலும் வன்முறை பரவி அமெரிக்கா குடிமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த மேக்சிகோ அரசு பத்தாயிரம் வீரர்களின் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது .எல் மென்சோவை கொன்றவர்களை ஒப்படைக்காவிட்டால் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என கார்டெல் அமைப்பினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல். இந்த ராணுவ நடவடிக்கை மற்றும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை மொத்தமா 63 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

 மேக்சிகோ அரசு பத்தாயிரம் வீரர்களின் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
 

Tags :

Share via
Logo