இந்தியா விமானங்கள் மே 24 காலை 5 .00மணி வரை பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த தடை.

by Admin / 22-04-2026 01:34:51am
இந்தியா விமானங்கள் மே 24 காலை 5 .00மணி வரை பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த தடை.

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி இந்தியாவிற்கு சொந்தமான வணிக மற்றும் ராணுவ விமானங்கள் அனைத்தும் மே 24 காலை 5 மணி வரை பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பகல் காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது இதன் காரணமாக ஏப்ரல் 24 2025 முதல் பாகிஸ்தான் தனது வான் வழியே இந்திய விமானங்களுக்கு மூடியது பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதித்தது இந்த தடையால் இந்திய விமானங்கள் ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்ல கூடுதல் தூரம் பயணிக்க வேண்டி உள்ளது .இதனால் எரிபொருள் செலவு மற்றும் பயண நேரம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது . இதற்கு முன் ஏப்ரல் 24ஆம் தேதி உடன் முடிவடையிருந்த தடை தற்பொழுது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது பாகிஸ்தான் விமான ஆணையம்.

 

Tags :

Share via

More stories

Logo