கஞ்சா, நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது.

by Editor / 03-11-2022 10:27:30am
கஞ்சா, நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது.

சென்னை போரூரை அடுத்த பாரதியார் தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்தவர்கள் தினேஷ் மற்றும் முகமது அஜீம். திடீரென இவர்களது வீட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கத்திகள், கஞ்சா, நாட்டு வெடிகுண்டு போன்றவை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, அங்கேயே இருவரையும் கைது செய்தனர்.பின்பு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தினேஷின் நண்பர் குள்ளகுமார் என்பவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு, தனசேகர் என்பவரது கும்பல் நுங்கம்பாக்கத்தில் வைத்து கொலை செய்ததாகவும், அதற்கு பழி தீர்க்க, நேரம் பார்த்து காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது

 

Tags :

Share via