ஆந்திர துணை முதல்வரை கைது செய்ய வேண்டும்

by Staff / 11-10-2024 01:51:29pm
ஆந்திர துணை முதல்வரை கைது செய்ய வேண்டும்

சனாதன தர்மத்தை ஒழிப்பதாக கூறிய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சித்திருந்தார். இந்நிலையில், தமிழக - ஆந்திர மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் சிவா, சென்னை காமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

 

Tags :

Share via