பாஜகவுக்கு ஆதரவு இல்லை.. பிஜூ ஜனதா தளம் அறிவிப்பு
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 24) பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய நவீன் பட்நாயக், நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என அனைவர்க்கும் அறிவுறுத்தியுள்ளார். ஒடிசா மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்பவும், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி குரல் எழுப்பவும் பி.ஜே.டி எம்.பிக்கள் முடிவு எடுத்துள்ளனர்.
Tags :