ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனைசெய்ய மத்திய அரசு திட்டம் .

by Editor / 28-12-2023 12:22:59am
ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனைசெய்ய  மத்திய அரசு  திட்டம் .

நாடு முழுவதும் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அரிசி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பாரத் என்ற பிராண்ட் பெயரில் ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனைசெய்ய திட்டமிட்டுள்ளது. தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தையிடல் கூட்டமைப்பு, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பாரத் அரிசி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாரத் பிராண்ட் என்ற பெயரில் பருப்பு வகைகள் மற்றும்  கோதுமை மாவை மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது.

ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனைசெய்ய  மத்திய அரசு  திட்டம் .
 
Tags : பாரத் பிராண்ட்

Share via

More stories