நடந்தாய், வாழி.. காவேரி என்று காப்பியங்களில் கொண்டாடப்பட்ட காவிரி ..இன்று தண்ணீர் இன்றி வறண்ட காவேரி ஆடிப்பெருக்கு விழா
நடந்தாய், வாழி.. காவேரி என்று காப்பியங்களில் கொண்டாடப்பட்ட காவிரி நதி இன்று தண்ணீர் இன்றி வறண்ட நிலை காணப்படும் சூழலிலும் டெல்டா பகுதி மக்கள் தங்கள் பாரம்பரிய ஆடிப்பெருக்கு விழாவை இனிதே கொண்டாடினர்.. பல்வேறு இடங்களில் சின்ன பாத்திரங்களில் காவேரி மணல் பரப்பில் வைத்து பூஜையை பொருட்களை பரப்பி வழிபாடு நடத்தி புதுமண தம்பதிகள் காவேரியை வணங்கி தாலி கயிற்றை மாற்றிக் கொண்டனர் கல்யாணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டு வழிபாடு நடத்தினர். பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் நதியில் கொண்டாடிய மக்கள்,வறண்ட மணல் பகுதியில் கொண்டாடியது தங்கள் பாரம்பரியத்தை தாங்கள் இழக்காமல் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.
Tags :



















