பருவமழை- மாவட்ட ஆட்சியர்களுடன் அக்.24- ல் முதலமைச்சர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 24- ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று காணொளி மூலம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்கின்றனர். அதேபோல் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சீரமைப்பு, நீர்நிலைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :