செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான் - அண்ணாமலை

by Staff / 16-09-2023 01:40:06pm
செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான் - அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜி இணையாத ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜியை பா.ஜ.க-வில் இணையச் சொல்லி அமலாக்கத்துறையினர் கேட்டதாகக் கூறியிருக்கிறார். "பாஜகவில் இணையுமாறு அமலாக்கத்துறை நிர்பந்தித்ததாக பொய் சொல்கிறார்கள்; ஜாமீன் வேண்டும் என்றால் உங்கள் பிரச்னையை சொல்லி கேளுங்கள்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags :

Share via