6 ஆம் தேதி இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் மகள் பரபரப்பு புகார்.

கோட்டயம் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இளைய மகள் அச்சு உம்மன், தனக்கு எதிராக நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். செயலகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு எதிராக பூஜாபுர போலீசில் புகார் அளித்தார். இது தவிர, மகளிர் ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தனது தந்தை இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு ரூபாய் கூட சம்பாதித்தது இல்லை என்று கூறினார். நேருக்கு நேர் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் என்றும் அச்சு உம்மன் குறிப்பிட்டுள்ளார்.
Tags :