தீமையை வென்றதை குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான திருவிழா ஹோலி.

by Admin / 03-03-2026 03:16:03am
தீமையை வென்றதை குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான திருவிழா ஹோலி.

தீமையை வென்றதை குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான திருவிழா ஹோலி. 2026 ஆம் ஆண்டின் சந்திர கிரகணம் மற்றும் திதி மாற்றங்களால் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றது. பல இடங்களில் மார்ச் 2 அல்லது மார்ச் 3 அன்று கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான மாநிலங்களில் மார்ச் 4 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது .இத்திருவிழா சில பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மக்கள் ஒருவர் மீது ஒருவர் குலால் எனப்படும் வண்ணப் பொடிகளையும் வண்ண நீரையும் பூசி மகிழ்ச்சியோடு ஆட்டம் பாட்டத்தில் ஈடுபடுவர். தீய சக்திகளின் அழிவை நினைவு கூறும் வகையில் முதல் நாள் இரவு பெரிய அளவில் தீ மூட்டப்பட்டு வழிபாடு நிகழ்த்தப் பெறும். குஜியா போன்ற இனிப்புகளும் தாண்டாய் போன்ற பானங்களும் இந்த பண்டிகையின் முக்கிய உணவுப் பொருள்களாகும்.. நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் இணைந்து இசை நடனம் மற்றும் விருந்துடன் இந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படும் இது தமிழ்நாட்டில் காமன் பண்டிகை என்று சங்க கால கட்டத்தில் கொண்டாடப்பட்ட பண்டிகையை நினைவு கூறுவதாக சொல்லப்படுகின்றது.

 நாளை புதுச்சேரியில் ஹோலிபண்டிகை கொண்டாட்டத்தின் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீமையை வென்றதை குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான திருவிழா ஹோலி.
 

Tags :

Share via

More stories