லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

by Admin / 02-05-2026 09:46:25am
 லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

லேபனான் மற்றும் ஹார்முஸ் நீரிணைதொடர்பான பதட்டங்கள் நீடித்து வரும் சூழ்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு லெபனானில் உள்ள ஹைபூஸ் உள்ளிட்ட பல கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் தொடரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இவ்குகுதியில் நிலவும் போர் பதட்டங்களால் நீர்ணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது தற்போது தினசரி பத்துக்கும் குறைவான கப்பல்களை இந்த பாதையை கடந்து செல்கின்றன. பாதுகாப்பான பயணத்திற்காக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஒரு கப்பலுக்கு சுமார் 10 லட்சம் டாலர் வரை கட்டணம் கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு இத்தகைய கட்டணங்களையோ அல்லது நன்கொடைகளையும் வழங்கும் நிறுவனங்கள் மீது கடுமையான தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க நிதித்துறை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo