நீச்சல் குளத்தில் குளிக்க ரூ.10 கொடுக்காத சிறுவன் கொலை

by Staff / 28-06-2024 12:39:29pm
நீச்சல் குளத்தில் குளிக்க ரூ.10 கொடுக்காத சிறுவன் கொலை

உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்திற்கு ஆயுஷ் யாதவ் என்ற சிறுவன் சென்றுள்ளார். நீச்சல் குளத்திற்கு ரூ.10 கொடுக்காததால் குளத்தின் உரிமையாளரான தந்தையும் மகனும் சேர்ந்து சிறுவனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சிறுவனின் வாய் மற்றும் மூக்கில் மணல் அள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo