மயில்சாமி என் நெருங்கிய நண்பர்.-ரஜினிகாந்த்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் சிவன் கோவிலில்
சாமி தரிசனம் முடித்து வீட்டு வந்தநிலையில் மாரடைப்பால் இறந்தார்.ஏற்கனவே இரண்டு முறை இருதய அறுவை
சிகிச்சை செய்து கொண்டவர்.சிவபக்தரான மயில்சாமி இசைக்கலைஞர் சிவமணியுடன் கோவில் இசை நிகழ்ச்சியின்
பொழுது,தனது இறுதி ஆசையாக ரஜினி காந்த் சிவனுக்கு பாலாபிசேகம் செய்வதை பார்க்க வேண்டும் என்று சொன்னதாக தகவலை அடுத்து இன்று காலை ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலுக்கு இறுதிமரியாதை செய்ய அவரதுசாலிகிராம வீட்டிற்கு வந்தார்.இறுதி மரியாதை செய்தபின்பு ரஜினிகாந்த்,மயில்சாமி என் நெருங்கிய நண்பர்.அவரது 24வயதிலிருந்தே அவரைத்தெரியும்.என்னோடு அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார் .எப்பொழுதும் சிவனைப் பற்றியே பேசுவார் .திருவண்ணாமலைக்கு கிரிவலத்திற்கு சென்றிருந்தால் அங்குவந்துள்ள கூட்டத்தைப்பார்த்து தான் ஹீரோவாக பண்ணிய படம் திரைக்கு வந்தால் எப்படிக்கூட்டம் கூடியிருப்பதைகண்டு சந்தோஷப்படுவாரே அதே போன்றே திருவண்ணாமலை கூட்டத்தைப்பார்த்து என்னிடன் போனில்பேசுவார்.விவேக்,மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே பேரிழப்பு.அவருடைய கடைசி ஆசையைசிவமணியிடம் பேசிய பின்பு நிறைவேற்றுவேன் .சிவபக்தரான அவரை சிவனின் உகந்த நாளிலே அழைத்துச்சென்று விட்டார் என்றார்.
Tags :