தென்காசி வழியாக தாம்பரம்-நெல்லை இடையே பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.
தாம்பரம் -நெல்லை இடையே தென்காசி வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லையிலிருந்து வருகின்ற 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை இடையே உள்ள மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்திற்கு ரயில் சேவை இயக்கப்படும் எனவும், இந்த ரயில் சேவையானது மாலை 3:30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 4.10 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து 13-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இடைப்பட்ட மூன்று திங்கட்கிழமைகளில் ரயில் சேவையானது நெல்லை நோக்கி இயக்கப்படும் எனவும், இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு நெல்லையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயிலானது விழுப்புரம், திருச்சி, விருதுநகர் வழியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லையை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : தென்காசி வழியாக தாம்பரம்-நெல்லை இடையே பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.