செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்

சென்னை தாம்பரம் இடையே இன்டர்லாக் சிக்னல் பணிகள் நடைபெறுவதால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கோட்டை, தென்காசி, சேரன்மாதேவி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்(20683/20684) வருகிற 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :